பொதுமக்களிடம் கருத்து கேட்க நீதிபதி முருகேசன் குழு முடிவு!!

 
முருகேசன்

 தமிழகத்திற்கு தனியாக மாநில கல்விக்கொள்கையை உருவாக்க நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு தரப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தை 8 கட்டங்களில்  பொதுமக்களிடம் கருத்து கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வகுப்பறைகள்

மாநில கல்வி கொள்கை  குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்படும். கூட்டத்தில்  இவை பரிசீலிக்கப்பட்டு ஆய்வு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு. மாநிலம் முழுவதும் கல்வி கொள்கையை வடிவமைப்பதற்காக பொதுமக்கள் அனைவரிடம் கருத்துக்களை பெற இக்குழு முடிவு செய்திருக்கிறது.அதன்படி தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.  அதன் மூலம் கல்வி கொள்கை வரையறை குழு ஆலோசனை நடத்த உள்ளது.

ஆசிரியர்கள்

இந்த கூட்டத்தில்  துறை வாரியாக ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளன.  மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் , கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரியும்  விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்வி கொள்கை குழுவின் அடுத்த கூட்டம் ஜூலை 27ல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web