ஜூலை 26 விடுமுறை!! உற்சாகத்தில் மாணவர்கள்!!

 
கங்கை கொண்ட சோழபுரம்

தமிழகத்தில் சோழர்கள் ஆட்சி காலத்தில் விண்ணை முட்டும் கட்டிடங்கள் , கோவில்கள் கட்டப்பட்டன. ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் தஞ்சையில் பெரிய கோவில் கட்டப்பட்டது . அவரது மகன் ராஜேந்திர சோழன் தன்னுடைய ஆட்சி காலத்தில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டினான். 

உள்ளூர் விடுமுறை
மாமன்னன் ராஜேந்திர சோழனால், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயம் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக் கலைகளின் பெருமையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பை கண்டு களித்திட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனி மாதம் திருவாதிரை நாளில் பிறந்த நாள்   காணும் ராஜேந்திர சோழனுக்கு பெருவிழா எடுத்து அப்பகுதி மக்கள் சிறப்பித்து வருகின்றனர். மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் தமிழக அரசு  அறிவித்திருந்தது. 

யுபிஎஸ்சி தேர்வு விடுமுறை மாணவர்கள் கல்லூரி
இந்நிலையில்,  ஜூலை 26ம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அரசு விழாவாக கொண்டாடுவதால், அன்றைய தினம்  அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை  மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web