மழலையர் பள்ளிகளுக்கு நாளைக்குள் சிறப்பாசிரியர்கள்!! அதிரடி உத்தரவு!!

 
மழலையர் பள்ளிகள்

 தமிழக அரசு கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

மழலையர் பள்ளி

அதன்படி சமீபத்தில் அரசுப்பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும்  2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவித்துள்ளனர். அதன்படி 2022-2023ம் ஆண்டு  முதல் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு மையத்திற்கு ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.இவர்களில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு பயிற்சி தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களையும் நியமிக்கலாம். 

மழலையர் பள்ளிகள்
 இவர்களுக்கு தற்காலிகப் பணி மட்டுமே என்பதை அறிவுறுத்த வேண்டும். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பிழைப்பூதியம் ரூ.5000/ வழங்கப்படும். இவர்களுக்கான பணிநேரம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே. இவர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே வேலை நாட்கள்.இவர்களுக்கு தேவையான சிறப்பு: பயிற்சிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும்.பயிற்சி நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். அக்டோபர் 14, நாளை, வெள்ளிக்கிழமைக்குள்  தற்காலிக சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்து பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web