உதட்டில் முத்தம்! முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்! வைரலாகும் வீடியோ!
முதலை ஒன்றை வெள்ளை கவுனில் அலங்கரித்து, உதட்டில் முத்தமிட்டு, திருமணம் செய்து கொண்டார் மெக்சிகோ நாட்டின், ஹவுமெலுலா நகரின் மேயர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக விக்டர் ஹ்யூகோ சோசா பதவி வகித்து வருகிறார். இவர் நகரின் பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
கிறிஸ்துவ முறைபடி நடைபெற்ற இந்த திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தது. இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது. திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார்.
மெக்சிகோவில் இம்மாதிரியான விநோத திருமணங்கள் நடப்பது இது முதன் முறை அல்ல. இந்த சடங்கு திருமணம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தைச் சேர்ந்த ஓக்ஸாகா மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது. இயற்கையின் கருணையை வேண்டி இம்மாதிரியான சடங்குகள் பழங்குடிகளால் பின்பற்றப்படுகின்றது.
திருமணம் குறித்து மேயர் விக்டர் கூறுகையில், “இயற்கையிடம் மழை, உணவு, மீன் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை" என்றார்.
இந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்த எலியா எடித் அகுய்லர் கூறுகையில், “இந்த சடங்கு நிறைய மகிழ்ச்சியை தருகிறது. எனது பழங்குடி இனத்தைக் கண்டு நான் பெருமை கொள்கிறேன். இது ஒரு அழகான சடங்கு” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!