எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கள் தொடர்ந்து செயல்படும்!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

 
மழலையர் பள்ளிகள்

தமிழகத்தில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் பரிசோதனை அடிப்படையில் L.K.G., U.K.G., வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வகுப்புக்களில் கடந்த சில வருடங்களாக  மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது.இதனால்  கூடுதல் எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் இருந்த பள்ளிகளில் L.K.G., U.K.G., வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டனர். 

தமிழக அரசு அதிரடி! அங்கன்வாடி மையங்களில் சத்துணவு!
ஆனால், நடப்பாண்டை பொறுத்தவரை அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டுகளை விட அதிகமான அளவில் மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர்.  இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் கூடுதலாக கடந்த கல்வியாண்டில் 3,000 வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அதிக  மாணவர் சேர்க்கையினால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்து வருவதை அடுத்து, L.K.G., U.K.G., வகுப்புகளை எடுத்த ஆசிரியர்கள்  பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரும் அங்கன்வாடி மையங்களில் தொடர்ந்து அவர்களது கல்வியினை தங்கு தடையின்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது உயர்வு:  தமிழக அரசு
இந்நிலையில், L.K.G., U.K.G., வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று  முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில்  அரசுப் பள்ளிகளில் L.K.G., U.K.G., வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் தேவையான இடங்களில் விரைவில் நியமிக்கப்படுவர் என  பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தமது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web