நிலச்சரிவு பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!! அதிர்ச்சி!!

 
நிலச்சரிவு

மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தததாக அஞ்சப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாகவே கனமழை பெய்து வருகிறது. அசாம், திரிபுராவில் பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த மாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மணிப்பூர் நிலச்சரிவு

அசாமில் மழை, வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மணிப்பூரிலும் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கனமழையால்  கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்நிலச்சரிவில் சிக்கி ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில்,  இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

நிலச்சரிவு

நிலச்சரிவால் பாறைகள் சரிந்து இஜெய்  ஆற்றின் குறுக்கே விழுந்ததால் நீரோட்டம் தடைப்பட்டு இங்குள்ள அணை உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அணை உடைந்தால் நோனி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் பெரும் அழிவு ஏற்படும். இதனால், அப்பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில்  மணிப்பூர் முதலமைச்சர்  என். பிரேன் சிங் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ. 5.லட்சமும்,  காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என  அரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web