காதல் தோல்வியால் மனநோயாளி ஆகி காணாமல் போன எம்பிஏ பட்டதாரி!! 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு!!

 
முத்து


கலெக்டராக ஆக வேண்டும் என்று நினைத்து படித்துக் கொண்டிருந்த முதுகலை பட்டதாரி காதல் தோல்வியால் தன்னையே மறந்து 3 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றித்திரிந்துள்ளார். அவரை அடையாளம் கண்ட குடும்பத்தினர் தற்போது பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.சுற்றுலா பயணிகளின் முதல் தேர்வாக இருப்பது கன்னியாகுமரிதான். தினந்தோறும் இங்கு நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். எந்தவொரு பகுதியிலுமே அடையாளம் தெரியாத அளவுக்கு சில நபர்கள் சுற்றித்திரிவது வழக்கம். அதிலும் சுற்றுலா தலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

முத்து

அப்படித்தான் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கன்னியாகுமரி ரெயில்வே ஸ்டேஷன் அருகே அமைந்துள்ள வங்கிகளில் நடைபாதையில் அமர்ந்திருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அங்கேயே சுற்றித்திரியும் அவர் எப்போதும் ஆங்கில பத்திரிகைகளையே வாசித்து வருவதை பழக்கமாக கொண்டு இருந்தார். அந்த பகுதிக்கு வருவோர் கொடுக்கும் உணவை சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கிவிடுவார்.

இந்நிலையில் அங்கு சுற்றுலாவுக்கு குடும்பத்துடன்வந்த தென்காசி மாவட்டம் தென்மலை என்ற ஊரைச் சேர்ந்த முருகன் என்பவர் கண்ணில் இவர் பட்டு இருக்கிறார். பார்ப்பதற்கு நம் உறவினர் போலவே இருக்கிறார் என்ற சந்தேகம் முருகனுக்கு ஆழமாக வந்ததால் அவரிடம் பேச்சு கொடுத்தார். முதலில் அவரிடம் பேச மறுத்த நபர், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரை பற்றிய விவரங்களை சொல்லத் தொடங்கினார். அவர் சொன்ன ஊரை வைத்து பார்க்கும் போது முருகன் தனக்கு வந்த சந்தேகத்தை உறுதி செய்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டு அங்கேயே சுற்றித்திரிந்தவரை எங்கும் ஓடாமல் பிடித்து வைத்தார். பின்னர் பல வருடங்களாக வெட்டாமல் கிடந்த அவரை முடியை திருத்துவதற்காக கடைக்கு அழைத்து சென்றார். பின்னர் குளிக்கவைத்து புதிய உடைகள்வாங்கிக் கொடுத்து தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

கன்னியாகுமரியில் கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தவர் தென்காசி மாவட்டம் தென்மலை என்ற பகுதியைச் சேர்ந்த முத்து என்பது தெரிய வந்துள்ளது. ராஜபாளையத்தில் பி.காம்.பட்டப் படிப்பை முடித்த முத்து, சென்னை பல்கலைக்கழககத்தில் எம்பிஏ படித்து முடித்துள்ளார்.

கன்னியாகுமரி

சென்னை விடுதியில் தங்கிக் கொண்டே நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி திடீரென்று விடுதியில் இருந்து காணாமல் போனார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் முத்துவை கண்டுபிடிக்க முடியவில்லை. காதல் தோல்வி காரணமாக அவர் காணாமல் போனதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் 3 ஆண்டுகளாக போலீசார், உறவினர்கள் தேடியு கிடைக்காத முத்து தற்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரியில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட முத்து, உரிய விசாரணைக்கு பின்னர் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web