எம்.பி. திடீர் தர்ணா போராட்டம்!! கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!!!

 
சின்ராஜ்

 நாமக்கல்  மாவட்டத்தில் 2019 மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றவர் ஏ.கே.பி.சின்ராஜ். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள அமைச்சர்களை சந்தித்து தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அத்துடன்  கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்து குறைகளை களையவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வந்தார்.

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!

சமீபத்தில் இவர்  லத்துவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது அங்குள்ள ஆவணங்கள் இவரது பார்வைக்கு வைக்கப்படாமல் இருந்தன இதன் அடிப்படையில் ஊராட்சித் தலைவர், செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிற்கு பரிந்துரை செய்தார். இதுவரை  அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி , மக்களவை உறுப்பினர் தலைமையில் கூட்டப்பட வேண்டிய மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம், மின்வாரிய குழு கூட்டம், சாலை பாதுகாப்பு குழு கூட்டமும் நடத்தப்படவில்லை. மேலும் இது குறித்து எழுப்பப்பட்ட புகார்களுக்கும் கலெக்டர் தரப்பில் முழுமையான பதில் அளிக்கப்படவில்லை.

சின்ராஜ்
இந்நிலையில் இன்று ஜூலை 11ம் தேதி திங்கட்கிழமை காலை  நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்களவை உறுப்பினர் சின்ராஜ், வருகை தந்தார். திடீரென அப்பகுதியில் ஆட்சியருக்கு எதிராக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். காவல் துறையினர் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தர்ணாவை கைவிட முடியாது. தொடர்ந்து போராட்டத்தை நடத்துவேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web