திரையுலகில் இன்னொரு காதல் ஜோடிக்கு திருமணம்! கண்மணியின் கரம் பிடித்தார் நவீன்!

 
கண்மணி நவீன்

செய்தி வாசிப்பாளரான கண்மணிக்கும், சின்னத்திரை நடிகரான கவினுக்கும் இன்று வெகுவிமரிசையாக திருமணம் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் வாழ்த்து மழையில் இந்த நட்சத்திர ஜோடி நனைந்து வருகிறார்கள்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்  இதயத்தை திருடாதே' தொடரில் நடித்து சின்னத்திரையில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நடிகர் நவீன். மேலும் ‘கண்டநாள் முதல்’ என்கிற தொடரிலும் தற்போது நடித்து வருகிறார். இவரது இயல்பான நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு உண்டு.

கண்மணி நவீன்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் கண்மணி. இவரின் தமிழ் உச்சரிப்புக்கும், அவரது ஆடை அணிகலன்கள் அணியும் நேர்த்திக்கும் என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதிலும் பெண் ரசிகர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

கிராமப்புற பின்னணியில் இருந்து சென்னை வந்த கண்மணி, தன் ஊரில் உள்ள பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக போராடி மீடியா துறைக்குள் நுழைந்து, தனது திறமையால் தனக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகர் நவீன்,கண்மணிக்கு இடையில் காதல் மலர்ந்தது. பல வருடங்களாக தொடர்ந்த இவர்களின் காதல் தற்போது திருமணம் என்ற பந்தத்தை எட்டியுள்ளது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் 'அரேஞ்சுடு கம் லவ்' மேரேஜ் என கெத்தாக சொல்லிக் கொள்ளும் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் வெள்ளித்திரை, சின்னத்திரை உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

கண்மணி நவீன்
அதைத்தொடர்ந்து நவீன், கண்மணியின் திருமணம் இன்று காலை சென்னையில் வெகு பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு அவர்களுடைய ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரை நட்சத்திரங்களின் காதல் திருமணத்தில் கலந்து கொண்ட சக நடிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web