இங்கிலாந்துக்கு எதிரான போட்டி! தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

 
இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 2வது போட்டியில் அபாரமாக விளையாடி, 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி. இந்த வெற்றியின்  மூலமாக டி-20 தொடரையும் கைப்பற்றியது. 

பர்மிங்காமில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

அணியின் எண்ணிக்கை 49 ஆக இருந்தபோது ரோகித் சர்மா அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் யாதவ் 15, ஹர்திக் பாண்ட்யா 12, தினேஷ் கார்த்திக் 12, ஹர்ஷல் படேல் 13, புவனேஷ்வர் குமார் 2 ரன்னில் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் ஆடினார்.

ind eng

இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட்டுகள், கிலீசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி முன்னணி வீரர்களை வெளியேற்றினர். அதிகபட்சமாக மொயீன் அலி 35 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

ind eng

இந்த நிலையில் இங்கிலாந்து அணி 17 வது ஓவர் முடிவில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web