நாளை மறுநாள் 100000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
குழந்தைகளுக்கான தடுப்பூசி

இந்தியாவில்  கடந்த சில வாரங்களாக கொரோனா  பரவல் பல்வேறு இடங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மாநிலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசிகளை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி

இந்தியாவில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு 2021  ஜனவரி 16 முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.  தற்போது 12 வயது பூர்த்தியான அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நிர்ணயித்து தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதன்படி ஒவ்வொரு வாரமும்  . மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.  ஏப்ரல் மாதம் வரை 28 சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

தடுப்பூசி

இதனையடுத்து மே மாதம் 8ம் தேதி அதிரடியாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாமில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  ஜூன்  12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.  இந்த வரிசையில் தற்போது நாளை மறுநாள் ஜூலை 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3வது முறையாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாமின் போது பூஸ்டர் தவணை தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web