மழை நீர் கசிவு அருவி போல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம் !! வாகன ஓட்டிகள் கடும் அவதி!!

 
மழை நீர்

சென்னை முழுவதும் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சமீபத்தில் திறக்கப்பட்ட திருவொற்றியூர் விம்கோ நகர் பாதையில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மெட்ரோ ரயில்  மேம்பாலத்தில் இருந்து மழைநீர் வெளியேற முறையாக பைப்லைன் அமைக்கப்படவில்லை. சென்னையில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மெட்ரோ

ரயில் மேம்பாலத்தில் மழை நீர் வெளியேற வழியில்லாததால் சாலையில் அருவிபோல் தண்ணீர் கொட்டி கொண்டுள்ளது.  இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் மழைநீர் வெளியேறும் வகையில் பைப்லைன் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் பல இடங்களில் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் சாலையில் அருவிபோல் கொட்டுகிறது.

ஆட்சி மாறினாலும் அவஸ்தை மாறுமா? கோயம்பேடு மெட்ரோ பெயர் மாற்றம் சர்ச்சை!
அவ்வழியே சென்ற இருச்கர வாகன ஓட்டிகள் நனைந்து பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதிலும் சிலர் மழையில் நனையாமல் இருக்க சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு நின்று விட்டனர். பல பேர் இவர்களைபார்த்து வாகனங்களுடன் நின்று கொண்டிருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து ஆய்வு செய்து மழைநீர் வடிகால் பைப்லைன் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web