அதிசயம்!! 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள்!! வெறும் கண்களால் பார்க்கலாமா?!

 
ஒரே கோட்டில் 5 கோள்கள்

வான்வெளியில் சூரியக்குடும்பத்தில் அமைந்துள்ள எட்டு கோள்களும் தங்களுக்கு உரிய வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வலம் வந்து கொண்டு இருக்கின்றன. நாம் வாழும் பூமி, சூரியனை ஒருமுறை முழுவதுமாக சுற்றி முடிக்க 365 நாட்கள் ஆகிறது. இதே போல பிற கோள்கள் சூரியனை சுற்றிமுடிக்க எடுத்துக் கொள்ளும் காலத்தில் வேறுபாடு உள்ளது. சூரியனை சுற்றி வரும் கோள்கள் எப்போதாவது சில சமயங்களில் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் அதிசயம் நிகழ்கிறது. 

அந்த வகையில், தற்போது புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 5 து கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு நடைபெறுகிறது. இதனை வருகிற 27ம் தேதி வரையில் காணலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பொது மக்கள் தங்கள் வெறும் கண்களாலேயே இந்த அதிசய நிகழ்வை வெறும் கண்களால் நேரில்  காண முடியும் .

 அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் சூரியனுக்கு மேலே வளைவாக இந்த 5 கோள்களும் அணிவகுத்து வரும் என்று தெரிவித்துள்ளது. சுமார் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அதிசய நிகழ்வு வானில் தென்படும். இந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தோன்றும் இந்த அதிசயம் ஜூன்27ம் தேதிக்கு பிறகு  2040ம் ஆண்டு தான் தோன்றும் என  விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த அதிசய நிகழ்வு இதற்கு முன்னர் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் வானில் தோன்றி மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web