இளைஞர்களே மிஸ் பண்ணீடாதீங்க!! 45000 பேருக்கு 4 வருட ஒப்பந்தத்தில் ராணுவத்தில் வேலை வாய்ப்பு!!

 
ராணுவம்

இந்திய நாட்டின்  பாதுகாப்பிற்காக மட்டுமே பட்ஜெட்டில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது. தற்போது ராணுவத்தில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை  மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் 3  படை பிரிவுகளிள்  4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் "  வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர். இந்த புதிய பணி நியமன முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய பணி நியமன முறை ராணுவத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி அநேக இளைஞர்கள்  ராணுவத்தில் சேர ஊக்குவிக்கும்.

ராணுவம்

இதன் மூலம் பணியில் அமர்த்தப்படும் அக்னி வீரர்கள்  4 வருடம் மட்டுமே பணியில் இருப்பர். மாத ஊதியமாக  இவர்களுக்கு  ரூ 40000 வரை சம்பளம் வழங்கப்படும். இத்திட்டத்தில் 45000 பேர் பணியில்  அமர்த்தப்பட உள்ளனர். 17.5 - 21 வயது வரை உள்ளவர்கள் இப்பணியில் சேரலாம். மொத்தம்  4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அத்துடன்  மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை திறமை மற்றும் தகுதியில் அடிப்படையில் ராணுவத்தில் நிரந்தரப் பணியில் சேர்க்கப்படுவர்.

ராணுவம்

ஆபிசர் அல்லாத ரேங்கில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். மீதமுள்ளவர்கள்  பென்ஷன் ஏதும் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். இத்திட்டம் மூலம் ராணுவத்தின்  செலவு பெரிய அளவில் குறைக்கப்படும்.  அக்னி பாத் திட்டம் மூலம் சேரும் ராணுவ வீரர்களுக்கு சம்பளம் மற்ற நிரந்தர வீரர்களை விட குறைவாகவும், அதே நேரத்தில்  பென்சனும் கிடையாது. ஆனால் கூடுதல் ராணுவ வீரர்கள் குறைந்த நிதி செலவில் ராணுவத்தில் பணியில் இருப்பார்கள். மிச்சமாகும் தொகையை ராணுவ தளவாட பொருட்கள் வாங்க பயன்படுத்த முடியும் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web