தமிழகத்தில் குரங்கு அம்மை?! சர்வ தேச விமான பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

 
குரங்கு அம்மை

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை செலுத்தி அவற்றை கட்டுக்குள் கொண்டு வந்தன. இதனால்  தற்போது  கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,  தற்போது குரங்கு அம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

குரங்கு அம்மை
இந்நிலையில், குரங்கு அம்மை பாதிப்புகள் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை விமான நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா,பிரிட்டன்,கனடா நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என சர்வதேச விமான நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குரங்கு காய்ச்சல்
அத்துடன் தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் போன்ற  அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை  மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கண்டிப்பாக 21 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


அதே நேரத்தில் அனைத்து மாவட்ட சுகாதார செயலாளர்கள் தங்களது மாவட்டங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.  வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் தகவல்களை சேகரித்து வைத்து அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில்  அவர்களின்  உடல்நிலை குறித்து தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த  வழிகாட்டு நெறிமுறைகளை  தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web