குரங்கு அம்மை உலக சுகாதார நெருக்கடி நோயாக அறிவிப்பு!! அதிர்ச்சி!!

 
குரங்கு அம்மை

உலகம் முழுவதும் கடந்த  2 ஆண்டுகளாக கொரோனா  மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த உலக் நாடுகள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு அடுத்தப்படியாக  குரங்கம்மை நோய் சர்வதேச அவசரநிலையாக பரவி வருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் பொது செயலாளர் டெட்ராஸ் அதானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குரங்கு வைரஸ்

அதில்  ஆப்பிரிக்க பகுதிகளில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கம்மை, தற்போது உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. மேலும் குரங்கம்மை நோயால் உலகம் முழுவதும் 72 நாடுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை குரங்கம்மை பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட  5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  பொதுவாக  ஒரு நோய்த்தொற்று பரவலானது, உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடி என்று முடிவு செய்வதற்கு 5 விஷயங்கள் பரிசீலிக்கப்படுவது வழக்கம். 


அதன்படி தற்போது குரங்கம்மை பொதுசுகாதார நெருக்கடியாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.  உலக அளவில்  பல்வேறு நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. மேலும் மனித ஆரோக்கியத்திற்கான ஆபத்து, சர்வதேச பரவல் மற்றும் சர்வதேச போக்குவரத்தில் குறுக்கிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை நோயால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து காணப்படுகிறது . இதன் அடிப்படையில்  சர்வதேச போக்குவரத்தில் குறுக்கிடுவதற்கான தற்போது தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது.

குரங்கு அம்மை

 புதிய வழிகளிலான பரிமாற்றத்தினால்,  குரங்கம்மை உலகம் முழுவதும் விரைவாக பரவி வருகிறது.  இந்த பரவலானது, சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளில் உள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்வதாக அச்சம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.அத்துடன் சமூக இடைவெளி, முகக்கவசம் இவைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web