2000க்கும் மேற்பட்ட சிறுதொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்!! தினசரி 250 கோடி இழப்பு!!

 
சிறுதொழில் நிறுவனங்கள்


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின்  தொழில் வாய்ப்பு, உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி, இருநாட்கள் வேலைநிறுத்த போராட்டம்  நடத்தபோவதாக ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலை சங்க தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 2,000க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

சிறுதொழில் நிறுவனங்கள்

இதன் மூலம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படித்த, படிக்காத மற்றும் கிராமப்புற இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றும்,  இந்த நிறுவனங்களில், கடந்த, 15 ஆண்டுகளாக உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே ஜி.எஸ்.டி., பொருளாதார நெருக்கடி, கொரோனா முடக்கம் போன்றவற்றால், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நஷ்டத்தால் மூடப்பட்டுள்ளன என்றும்,  பல தொழில் முனைவோர் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துள்ளனர் என்றும், மீதமுள்ள நிறுவனங்களை காப்பாற்ற, உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் தொழில் வாய்ப்பு (ஜாப் ஆர்டர்களுக்கு), உரிய நியாயமான விலையை வழங்க, இங்குள்ள பெருநிறுவனங்கள் முன்வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். 

தொடர் போராட்டம்
மேலும், குறு, சிறு நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி  வரும் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள், 2,000க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளை மூடி, வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதனால் நாளொன்றுக்கு, 250 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web