ஈபிஎஸ் தரப்பில் 2300க்கும் மேற்பட்டோர் ஆதரவு!!! நாளை மறுநாள் அதிமுக பொதுக்குழு கூட்டம்!!

 
இபிஎஸ்

அதிமுகவில் ஒற்றை தலைமை, உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ம் தேதி நடைபெற உள்ளது.  பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உறுதி செய்துள்ளார். இதன் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்குமாறு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்  எடப்பாடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

ஒபிஎஸ்
அதே நேரத்தில் ,திட்டமிட்டப்படி,நாளை மறுநாள் பொதுக்குழு கூட்டத்தை நடத்த 2,300க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ளதாக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்த வேண்டும் எனவும், அதில் நிச்சயம் கலந்து கொள்வோம் எனவும்எழுத்துப் பூர்வமாக 2300க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். 

ஒபிஎஸ் இபிஎஸ்
இதனால்,நாளை மறுநாள் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும். இந்த கூட்டத்திலேயே ஒற்றை தலைமை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,  இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் பதிலளிக்க வேண்டும் என  சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி உட்கட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்து வருவதால் பொதுக்குழுவை நடத்த கூடாது என ஈரோடு சி.பாலகிருஷ்ணன் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருவது  மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு,வழக்கை 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web