70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் இணையதளங்கள் முடக்கம்!! ஹேக்கர்களின் அட்டகாசம்!!

 
ஹேக்கர்கள்

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின்போது முகமது நபிகள் குறித்து சர்ச்சையாகப் பேசியது பெரும் கலவரங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த கருத்துக்களுக்கு  பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது. மேலும், வளைகுடா நாடுகளில் இருந்து கடுமையான எதிர்ப்பு வெளியானதையடுத்து, பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஹேக்கர்கள்

மேலும், நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிந்தால் மீது சர்ச்சைகுரிய வகையில் பேசியதாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நபிகள் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தியாவைச் சேர்ந்த அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். குறிப்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம், தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை அமைப்பு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், நாக்பூரிலுள்ள அறிவியல் கல்வி நிறுவனம், டெல்லி பப்ளிக் ஸ்கூல் உள்ளிட்ட பல அமைப்புகளின் இணையதளங்கள் கடந்த சில நாட்களில் முடக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் மட்டும் 50-க்கும்  மேற்பட்ட இணையதளங்களில் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனை டிராகன்ஃபோர்ஸ்மலேசியா என்ற பெயரில் இணையதளங்களை முடக்கியுள்ள ஹேக்கர்கள், ‘உங்களுக்கு உங்கள் மதம்! எனக்கு என் மதம்!’ என ஆடியோ மற்றும் வாசகங்களை வெளியிட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web