வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!! இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!!

 
டோல்கேட்

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலில் ஏற்படாமலிருக்க  தென் தமிழகம் உள்பட வடமாநிலங்களிலிருந்து அம்பத்தூர், திருமுடிவாக்கம், திருமுல்லைவாயில் சிட்கோ, மாதவரம், மணலி, நியூடவுன் மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் செல்லவும் துறைமுகம் செல்ல வண்டலூர் முதல் மீஞ்சுர் வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு 400 அடி சென்னை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 

சுங்கசாவடி டோல்கேட்

சென்னை மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 60 கிலோ மீட்டர் தூர வெளிவட்ட சாலையானது ரூ. 2,156 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் இந்த சாலையில் 5 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த சாலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரதராஜபுரம், கோலப்பன் சேரி, பாலவேடு சின்ன முல்லை வாயில் ஆகிய சுங்க சாவடியில் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், வரதராஜபுரம் சுங்கச்சாவடியில் முதல் சென்று வர 50 ரூபாய் முதல் 323 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 2923 ரூபாய் முதல் 18,890 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோலப்பன் சேரி சுங்கச்சாவடியில் முதல் சென்று வர 21 ரூபாய் முதல் 115 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 1225 ரூபாய் முதல் 7913 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாலவேடு சங்கச்சாவடியில் முதல் சென்று வர 27 ரூபாய் முதல் 173 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 1577 ரூபாய் முதல் 10,192 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சின்ன முல்லை வாயில் சுங்கச்சாவடியில் முதல் சென்று வர 18 ரூபாய் முதல் 119 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 1080 ரூபாய் முதல் 6976 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை