முலாயம்சிங் யாதவ் தொடர்ந்து கவலைக்கிடம்!! சோகத்தில் தொண்டர்கள் !!

 
முலாயம்சிங் யாதவ்

உத்தரபிரதேசம் மாநிலத்தின்  முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ். இவருக்கு வயது 82. இவர் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர். முலாயம்சிங்  வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைபாடு காரணமாக கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

முலாயம்சிங் யாதவ்

உடல்நிலை வழக்கத்தை விட மிக மோசமானதை தொடந்து  மேல் சிகிச்சைக்காக ஆகஸ்ட் 22ல் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் மருத்துவ வல்லுனர்கள் குழு  அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அதிலும் அக்டோபர் 3ம் தேதி முதல் முலாயம்சிங் உடல்நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முலாயம்சிங் யாதவ்

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவருக்கு உயிர் காக்கும் மருந்துகள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ வல்லுனர்கள் குழு 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வருவதாகவும்  மேதாந்தா மருத்துவமனை விடுத்த செய்திக்குறிப்பில் விளக்கம் அளித்துள்ளது. அதே நேரத்தில் முலாயம் சிங் இன்னமும் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web