நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க முடியாது!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

 
நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி,ரவிசந்திரன் இருவரும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடுத்துள்ளனர் . அதன்படி, நடைபெற்ற வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விடுதலை செய்ய ஆளுநரின் கையெழுத்து அவசியம். இருந்த போதிலும்  உயர் நீதிமன்றம் கூட பரிசீலிக்கலாம் என தமிழக  அரசு தெரிவித்துள்ளது. 

பேரறிவாளன்
மேலும்,அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டாலும்  அதை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அறிவிக்கலாம். ஆனால்  ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால்,மீண்டும் ஆளுநருக்கு அனுப்பக் கூடாது எனவும் நளினி தரப்பில் வாதிடப்பட்டது. இதன் காரணமாக இந்த தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. 
இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுதலை விடுதலை செய்யக் கோரி நளினி,ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்குகளில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

பேரறிவாளன் கைதாகி 30 ஆண்டு நிறைவு: இருள் விலகி ஒளி பிறப்பது எப்போது? – டாக்டர் ராமதாஸ்

அதன்படி,இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட உள்ளதால் மக்களிடையே பெரும்  பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  மே  18ம் தேதி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் கால தாமதப்படுத்தினார். இந்த காரணத்தினால் பிரத்யேக அதிகாரமான சட்டப் பிரிவு 142ன் கீழ் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்றம் தங்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி நளினி, ரவிசந்திரன் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது .இந்த வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தை போல் சென்னை உயர் நீதிமன்றம் அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கவோ, உத்தரவிடவோ முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web