தேசிய கல்விக்கொள்கை மாநாடு!! தமிழக அரசு புறக்கணிப்பு!

 
மோடி தேசிய கல்வி கொள்கை

தேசிய கல்விக் கொள்கை என்பது 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 1986, 1992-ம் ஆண்டுகளில் கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. 

அதன்பின் கடந்த 2016-ல் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. இதற்கிடையே 2019-ல் கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்து. 

தமிழக அரசு

இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதுவே தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை கூட்டம் குஜராத் மாநிலத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர்கள், மாநில கல்வி அமைச்சர்கள், அரசின் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

தேசிய கல்விக் கொள்கை, பள்ளிகளில் திறன் மற்றும் தேசிய டிஜிட்டல் கல்வி மற்றும் தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம்  உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

இந்நிலையில், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழக கல்வித்துறை அமைச்சர்களுக்கு அழைப்பு வந்த போதும் அதில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web