திட்டமிட்டபடி ஜூலை 17ல் நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

 
நீட்

திட்டமிட்டப்படி ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அதன்படி, நாடு முழுவதும் ஜூலை 17-ம் தேதி நீட் நுழைவு தேர்வு நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்தது. இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 20-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

குட் நியூஸ்!! ஜனவரியில் இலவச நீட் பயிற்சி! தமிழக அரசு அறிவிப்பு!

இந்த நிலையில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஒரே தேதியில் பல்வேறு தேர்வுகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் மாணவர்கள் பதிவிட்டிருந்தனர். 

நீட் தேர்வு மாநில அளவில் நடத்தப்படும்!

நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என நாடெங்குமிருந்து கோரிக்கைகள் வந்த நிலையில் தேசிய தேர்வு முகாமை விளக்கம் அளித்துள்ளது. திட்டமிட்டப்படி ஜூலை 15-ம் தேதி கியூட் தேர்வும், ஜூலை 17-ம் தேதி நீட் தேர்வும், ஜூலை 21-ம் தேதி ஜி மெயின் தேர்வும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web