ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று நீரவ் சோப்ரா புதிய சாதனை!!

 
நீரவ் சோப்ரா

 பின்லாந்து நாட்டில்  நடைபெற்று வரும் பாவோ நூர்மி போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர். தற்போது பின்லாந்தில் நடைபெற்று வரும்  பாவோ நூர்மி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார் .

நீரவ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு அவர் கலந்து கொள்ளும்  முதல் போட்டி இதுவே.  இதில் 88.30 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். சென்ற ஆண்டு 2021 பாட்டியாலாவில் நடைபெற்ற போட்டியில் 88.07 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா தேசிய அளவில் சாதனை படைத்தார். அவருடைய சாதனையை  தற்போது அவரே முறியடித்துள்ளார்.

ஒலிம்பிக் சீசனில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரத்திற்கு பின்லாந்து வீரர் ஆலிவர் ஹெலாண்டர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.  உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.60 மீட்டர் தூரம் எறிந்து 3வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web