ஆம்னி பஸ்களின் புதிய கட்டணங்கள் வெளியீடு! எந்த ஊருக்கு எவ்வளவு ரூபாய்? தீபாவளிக்கு வெச்சு செய்வாய்ங்க!?

 
koyambedu bus stand ஆம்னி பஸ்

ஆம்னி பேருந்துகள் புதிய கட்டண விபரங்களை வெளியிட்டுள்ளன. எந்த ஊருக்கு எவ்வளவு ரூபாய் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க. சும்மாவே வெச்சு செய்வாய்ங்க... இப்போ கால்ல சலங்கை வேற கட்டியிருக்காய்ங்க என்று இந்த புதிய கட்டண விபரங்கள் குறித்து புலம்புகிறார்கள் பொதுமக்கள்.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு ஆட்டோ பிடிக்கும் போதே கசக்க தொடங்கி விடுகிறது சென்னைவாசிகளுக்கு.  ஏதோ  வெளியூரில் இருந்து வந்திறங்கிய கிரகவாசிகளைப் போல, அதுவரை கேள்விபட்டிராத ரேட்டை சொல்வார்கள். பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் செந்த ஊருக்குச் செல்ல பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே நம்பி வருகின்றனர்.ஆனால் ரயில் டிக்கெட்கள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்து போகிறது.. இதனால் பேருந்து பயணத்தை நாடுகின்றனர்.

கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகள் பலர் அரசுப் பேருந்தில் இடம் கிடைக்காத நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் பயணம் செய்வது வழக்கம். இதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகிறது.இதையடுத்து புதிய பயண கட்டண பட்டியல் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது புதிய கட்டண பட்டியலை வெளியாகியுள்ளது.

தனியார் ஆம்னி பேருந்து கோயம்பேடு

​பண்டிகை மற்றும் சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் பொதுவாகவே கூட்டத்தைப் பார்த்து அரைமணிக்கொரு தரம் டிக்கெட் விலையை ஏற்றிக் கொண்டே செல்லும் ஆம்னி பேருந்துகள், இந்த புதிய கட்டண உயர்வுக்குப் பின்னர், எழுதப்படாமல் எவ்வளவு விலையை உயர்த்தப் போகிறார்களோ என்கிற அச்சத்தில் பொதுமக்கள் இப்போதே புலம்ப துவங்கியுள்ளனர். இனி, பிக்ஸ் பண்ணியிருக்கிற ரேட்டே இவ்வளவு ரூபாய் வருது என்று தங்களது கட்டண கொள்ளைக்கு சாக்கு சொல்வார்கள். சரி.. சரி.. விஷயத்துக்கு வருவோம். எந்த எந்த ஊருக்கு என்னென்ன விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிஞ்சுக்கோங்க. அப்ப தான் பேரம் பேசி, மேல இருநூறோ, முந்நூறோ கொடுத்து பத்திரமா ஏமாறாம (?!) ஊர் போய் சேர முடியும்.

சென்னை - கோவை: குறைத்த பட்சம் ரூ1815 முதல் அதிகபட்சம் 3025

சென்னை - மதுரை: குறைந்த பட்சம் ரூ1776 முதல் அதிகபட்சம் 2688

சென்னை - சேலம்: குறைந்த பட்சம் ரூ1435 முதல் அதிகபட்சம் 2109

சென்னை - பழனி குறைந்த பட்சம் ரூ1650 முதல் அதிகபட்சம் 2750

சென்னை - தென்காசி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465

சென்னை - திருநெல்வேலி குறைந்த பட்சம் ரூ 2063 முதல் அதிகபட்சம் 3437

சென்னை - திருப்பூர் குறைந்த பட்சம் ரூ 1667 முதல் அதிகபட்சம் 2777

சென்னை - நாகப்பட்டினம் குறைந்த பட்சம் ரூ 1271 முதல் அதிகபட்சம் 1767

சென்னை - திருச்சி குறைந்த பட்சம் ரூ 1394 முதல் அதிகபட்சம் 1938

ஆம்னி பேருந்து தனியார் பஸ்

சென்னை - உடன்குடி குறைந்த பட்சம் ரூ 2211 முதல் அதிகபட்சம் 3630

சென்னை - திருச்செந்தூர் குறைந்த பட்சம் ரூ 2112 முதல் அதிகபட்சம் 3520

சென்னை - ஆறுமுகநேரி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465

சென்னை - ஆத்தூர் குறைந்த பட்சம் ரூ 2063 முதல் அதிகபட்சம் 3437

சென்னை - தூத்துக்குடி குறைந்த பட்சம் ரூ 2013 முதல் அதிகபட்சம் 3355

சென்னை - தென்காசி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web