மறுபடியும் மொதல்...ல இருந்தா...!! பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! அதிகரிக்கும் கொரோனா எதிரொலி!!

 
மாணவர்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளும், தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி சமூக இடைவெளி, முகக்கவசம்  அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மாணவர்கள்

இதனையடுத்து  பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்தவும், அதனை முற்றிலும் தடுக்கவும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளி வளாகத்திற்குள்  கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கொரோனா தடுப்பு முறைகளை கடைப்பிடிப்பதை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.அதன்படி மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் . சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். மேலும்  மாணவர்கள் அடிக்கடி, சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை
அத்துடன்  அதிக எண்ணிக்கையில்  மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், கொரோனா மேலும் பரவும் வாய்ப்புக்கள் அதிகம். இதனால்  மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட  வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். பள்ளிகளில்  தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web