அடுத்த அதிர்ச்சி!! ஆந்த்ராக்ஸ் பரவல் அதிகரிப்பு!! அச்சத்தில் சுகாதாரத்துறை!!

 
ஆந்த்ராக்ஸ்

இந்தியாவில் பல பகுதிகளில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளையும் , , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில்  ஆந்தராக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு  அமைந்துள்ள  அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி வனப்பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டன. 

ஆந்த்ராக்ஸ்
இந்த பன்றிகளின் மாதிரிகள் சோதனைக்காக எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனையின் முடிவில் பன்றிகளுக்கு ஆந்தராக்ஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த விலங்களை மீட்டு பரிசோதனை மேற்கொண்ட 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆந்தராக்ஸ் பாதிப்புக்கள் மற்ற விலங்குகளுக்கு உடனடியாக பரவி விடும் அபாயம் கொண்டது. இதனால் இந்த பாதிப்புக்கள் மற்ற விலங்குகளுக்கு பரவாமல் இருக்க சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் உள்ளது.

ஆந்த்ராக்ஸ்

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் ஆந்தராக்ஸ் நோய் பரவி வருகிறது. அதே நேரத்தில் இந்த பரவல் குறித்து  பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இது காற்று மூலமாகப் பரவக் கூடியது அல்ல. மற்ற விலங்குகளுக்கு தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே. பெசில்லஸ்  ஆந்திராசிஸ் என்ற பாக்டீரியா விலங்குகளை பாதிப்பதன் மூலம் இந்த ஆந்தராக்ஸ் நோய் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்களுடன் மனிதர்கள் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது அது சாப்பிட்டு மீதம் வைத்த பொருள்களை உண்பது மூலமாகவோ இந்த தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web