அடுத்த அதிர்ச்சி!! மின் அட்டை எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்!! அதிரடி உத்தரவு!!

 
மின் அட்டை ஆதார்

தமிழகத்தில் சமீபத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் பெறுபவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை. இவர்களது பயன்பாட்டை கணக்கீடு செய்யும் வகையில் தற்போது கிடுக்கிப்பிடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின் அட்டை ஆதார்

அதன்படி  இலவச மின்சாரம் பெறுபவர்கள், மானிய மின்சாரம் பெறும் பயனாளிகள் தங்களின் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும்  என தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசிதழில்  வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மின் முறைகேட்டை தடுக்கலாம் என விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.  மின்நுகர்வோர் எண்ணை  ஆதார் எண்ணுடன்  இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  

மின் அட்டை ஆதார்

ஆதார் எண் இணைப்பதன் மூலம் மானிய மின்சாரத்தை  முறைகேடு செய்பவர்களை மிக எளிதாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மற்றும் மானிய மின் நுகர்வோர் குறித்த அனைத்து தகவல்களும்  ஏற்கனவே 1 கோடியே 15 லட்சம் பேரிடம் பெறப்பட்டுள்ளது. இன்னும் 3 கோடி நுகர்வோர்கள் உள்ள நிலையில் இவர்களது ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்கவும், இவர்களது  தொலைபேசி எண்களை சேகரிக்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் இழப்பீட்டை தடுக்க முடியும் என மின்சார  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை