இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி!! புதிய உச்சம் தொட்ட முட்டை விலை!!

 
முட்டை விலை உயர்வு! கல்லா கட்டும் தீபாவளி விற்பனை!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் முட்டை உற்பத்திகளில் முண்ணனியில் உள்ளது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதனால் நாள்தோறும் 5 கோடிக்கு மேல் முட்டைகள் உற்பத்தியாகின்றது. மொத்த உற்பத்தியில் கேரள, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தில் பிறப்பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை விலை திடீர் உயர்வு

இந்த நிலையில், நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மண்டல தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளார்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. 

முட்டை விலை திடீர் உயர்வு

இதனைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது மேலும் 15 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.35-ஆக நிா்ணயிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் முட்டையின் விலை ரூ.5.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் முதல் முட்டை விலை தொடர்ந்து உயர்நது வருவது குறிப்பிட்டத்தக்கது.பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 131-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 107-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web