ஜீவசமாதி நிலையில் நித்தியானந்தா!? சிலைக்கு அபிஷேகம்!

 
நித்தியானந்தா

கைலாசாவில் இருந்து கொண்டு அறிக்கைகளும், வீடியோக்களும் வெளியிட்டு வந்த நித்தியானந்தா, உடல்நிலை மிக மோசமடைந்து தவித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், அமர்ந்த நிலையில், நித்தியானந்தனா ஜீவ சமாதி நிலை அடைந்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. நித்தியானந்தாவின் சிலைக்கு அபிஷேகம் நடைபெறும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. சர்ச்சை பேச்சுகளுக்கும், பரபரப்புக்கும் பெயர் போனவர் நித்யானந்தா. இவர் குஜராத், கர்நாடகா போலீசார் தேடப்பட்டு வரும் சாமியார். இவர்களிடம்  இருந்து கம்பி நீட்டிய நித்யானந்தா, கைலாசா என்ற தனி நாட்டில் தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கியதாக சொல்லி பிரபலம் அடைந்தார். அங்கிருந்து கொண்டு இணையதளம் மூலமாக சீடர்களுக்கு அருள்வாக்கு வழங்கி வந்தார். மேலும் கைலாசா என்ற பெயரில் வங்கியும், அதற்கான நாணயங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கைலாசா நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்த இளைஞர்கள் பலர் விசா விண்ணப்பித்த வினோத சம்பவங்களும் பெரும் விந்தையை ஏற்படுத்தியது அனைவரின் நினைவிலும் இருக்கும். இருப்பினும் போலீசாரால் நித்யானந்தாவின் நிழலை கூட தொட முடியாமல் போனது துரதிருஷ்டம்.

நித்தியானந்தா
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமாதி நிலையில் இருந்த நித்யானந்தா, தற்போது உயிருடன் இல்லை என்பது போன்ற பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமாதி நிலையில் இருந்த நித்யானந்தாவுக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும், இருப்பினும் தன்னால் உணவு உட்கொள்ளவும், தூங்கவும் முடியவில்லை என்று பதிவுகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து சில நாட்களில் சமாதி நிலையில் இருந்த நித்யானந்தா திடீரென்று கோமாவுக்கு சென்றுவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு நித்யானந்தா மறுப்பு தெரிவித்து, ‘‘சமாதி முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும் நிலை. அது உண்மையில் பிரபுஞ்ச ஒழுங்குமுறை. பரமசிவனின் அறவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் தன்னைத்தானே சீரமைத்துக் கொள்கிறது என்று பதில் அளித்தார்.

நித்தியானந்தா
தற்போது நித்யானந்தா உருவம் போன்ற சிலைக்கு அபிஷேகம் செய்யப்படுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலர் இந்து மதத்தில் உயிருடன் இருக்கும் ஒருவருக்கு தெய்வ வழிபாடு செய்வது வழக்கம் கிடையாது என்பதால், சமாதி நிலையில் இருந்த நித்யானந்தா உயிரிழந்துவிட்டாரா என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இது குறித்து கைலாசா நாட்டில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு நித்யானந்தேஸ்வரர் என்ற பெயரில் கோவில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சித்திரை நட்சத்திர உற்சவம் சிறப்பு பூஜை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாட்களாக சமாதி நிலையில் இருந்து வரும் நித்யானந்தா, தன் உயிர் போனால் அது திருவண்ணாமலையில்தான் என்று அடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web