யாரும் விஜய் படத்தை பார்க்காதீங்க!! ஆதினம் சர்ச்சை பேச்சு!! கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்!!

 
விஜய் ஆதினம்

.

தமிழ் திரையுலகில் முண்ணனி கதாநாயகர்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றவர் நடிகர் விஜய். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். . இவருக்கு தமிழகத்தில்  மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படம் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. தற்போது, இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

ஆதினம்

இந்த நிலையில் விஜய்யின் திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என்று பிரபல சாமியார் பேசியிருக்கும் பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மதுரை பழங்காநத்தம் என்ற பகுதியில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷித் சார்பில் துறவிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுரை ஆதினம் கலந்து கொண்டு ஆவேசமாக பேசி இருந்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது, நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் அனைத்தும் இந்து மதங்களை அவமதிப்பதாக இருக்கும் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அவரது படங்களைப் பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார். கடவுளை இழிவு படுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என்று சொல்வதாகவும், சாலமன் பாப்பையாவுக்கு பல்லக்குத் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்துக்களை அவமதிப்பை அதற்கான வசனங்கள் திரைப்படத்தில் அதிகமாகப் பேசும் நடிகர் என்றால் விஜய் என்றும் இதனால் அவரது படத்தை பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் கூறியதற்கு விஜய் ரசிகர்கள் உட்பட பலர் கண்டனங்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய்மேலும், ஆதீனங்கள் அரசியல் பேசாமல் வேறு யார் பேசுவது என்றும் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web