வரப்போகுது வடகிழக்கு பருவமழை! மாநகராட்சி அதிரடி உத்தரவு!

 
சாலை சாலையில் மரங்கங்கள் மரம் முறிவு மழை

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவில், சாலைகள் மற்றும் பொது இடங்களில் காய்ந்த, பழமையான மற்றும் கீழே விழும் நிலையில் இருக்கும் மரங்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக சென்னையின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மாலையில் பலத்த காற்றுடன் வீசத் தொடங்கி, மாலையிலும், இரவு நேரங்களிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

சாலை சாலையில் மரங்கங்கள் மரம் முறிவு மழை

பலத்த காற்று வீசுவதால் சாலையோரங்களில் மற்றும் பொது இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மரக்கிளைகள் முறிந்து விழுந்தும் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அவை வாகனங்கள் மீதும், மனிதர்கள் மீதும் விழுந்து காயம் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுவது துரதிருஷ்டவசமானது.

எனவே சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து பழமையான, காய்ந்து போன மற்றும் விழும் நிலையில் இருக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சாலை சாலையில் மரங்கங்கள் மரம் முறிவு மழை

இந்நிலையில், வரப்போகும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில், பழமையான, காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்கள், மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மேலும் மரங்கள் கீழே விழுந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த தேவையான எந்திரங்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வரப்போகும் பருவமழையை எளிதில் எதிர்கொள்ளலாம் என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web