நடிகர் பிரபாசுக்கு நோட்டீஸ்!! ரசிகர்கள் கொந்தளிப்பு!!

 
பிரபாஸ்

 இந்தியாவின் முண்ணனி  நடிகர்களில்  பிரபாஸ்  குறிப்பிடத்தக்கவர். இவரது பாகுபலி படம் வரலாற்று வசூல் சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது இவரது நடிப்பில்  ஆதி புருஷ் படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படம் ஜனவரி 12, 2023ல் திரைக்கு வருகிறது.

பிரபாஸ்

இந்த படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் படத்தில்  ராமர் வேடத்தில் பிரபாசும், சீதையாக கீர்த்தி சனோனும்,  ராவணனாக சைப் அலிகானும்  நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பலவிதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த படத்தில் கிராபிக்ஸ் பணிகள் மிகவும் மட்டமாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்தனர். குறிப்பாக அனுமானை கார்ட்டூன் படத்தில் கூட இதுபோல் காட்ட மாட்டார்கள் என தெரிவித்திருந்தனர். 

ஆதிபுருஷ்
இந்து மதத்துக்கு எதிராக இந்துக்களை புண்படுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக அயோத்தி ராமர் கோயில் தலைமை குரு சத்தியேந்திர தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர்  இந்த படத்துக்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து படத்தில் நடித்துள்ள பிரபாஸ், தயாரிப்பாளர், இயக்குனர் ஓம் ராவத் ஆகியோருக்கு  தேசிய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  ‘இந்துக்களை புண்படுத்தி இந்த படம் உருவாகி இருப்பதாகவும் இதை கைவிட வேண்டும்’ எனவும்  வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web