நூதனத் திருட்டு!! ஓடும் ரயிலில் தாவி செல்போன் பறிக்க முயற்சி!! கால்களை இழந்த பரிதாபம்!!

 
ரயிலில் திருடன்

பெரும் நகரங்களில் வசித்து வருபவர்கள் பணியிடங்கள் மற்ற தேவைகளுக்காக வசிப்பிடங்களிலிருந்து ரயில் மூலம் பயணம் செய்வதையே பெரும்பாலும் விரும்புகின்றனர். அந்த வகையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய தேவைகள், பொழுதுபோக்குகளுக்காக சென்னை செல்ல மின்சார ரயிலில் பயணம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயிலில் நூதன திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் ரயிலில் பயணம் செய்பவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ரயிலில் திருடன்

இந்த ரயிலில் செல்லும் பயணிகளிடம், செல்போன் பறிப்பு  சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ரயிலின் ஜன்னல் ஓரம்  அமர்ந்து பயணிக்கும் பயணிகள், ரயில் படியில் நின்றபடி செல்லும் பயணிகள்,  உறங்கிக்கொண்டு செல்லும் பயணிகளை குறிவைத்து நிறைய திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் சென்று கொண்டிருந்த ரயில் பழைய வண்ணாரப்பேட்டை  பென்சில் பேக்டரி - கொருக்குப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது மெதுவாக சென்றது.

அப்போது, ரயிலின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் ஜன்னலைத் தாவிப்பிடித்து ஜன்னல் ஓரத்தில் இருபந்த பயணிகளிடம் செல்போன் மற்றும் நகைகளை பறிக்க முயற்சித்துள்ளார். இதைக்கண்ட ரயில் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்ட நிலையில், ஜன்னலில் தொங்கியபடி வந்த அந்த வாலிபர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவரது கால்கள் ரயில் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது.

ரயில் சக்கரத்தில் சிக்கிய அவரது இடது கால் நசுங்கி துண்டானது. வலது காலும் சக்கரத்தில் சிக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காயமடநை்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நவீன் என்ற அட்டை நவீன் (21) என்று தெரியவந்துள்ளது.

வழக்கமாக பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி-கொருக்குப்பேட்டை இடையே மின்சார ரெயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் செல்லும்போது வேகம் குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள், ஓடும் ரயிலில் தாவி குதித்து ஏறி ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும் பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபடுவது வழக்கம்.கொள்யைன் நவீனும் இதுபோல் மின்சார ரயிலில் பயணிகளிடம் செல்போன் பறிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவர் மீது ஏற்கனவே கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில் 6 வழக்குகள் உள்ளன.

ரயில் திருடன்

 இந்த வழித்தடத்தில் பயணியின் செல்போன் பறிக்க ரயிலில் ஏறிய திருடன்  தவறி கீழே விழுந்ததில், அவரது கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வண்ணாரப்பேட்டை பென்சில் பேட்டரி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன் (எ) அட்டை நவீன் (24). இவர் மீது வழிப்பறி, செல்போன் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கால் துண்டான செல்போன் கொள்ளையன் நவீன் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web