நூதன போஸ்டர்!! உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இளைஞர்கள்!!

 
போஸ்டர்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதிக்கு அருகே பாலவிளை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், உள்ளூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வரும் வரன்களை தடுத்து நிறுத்துவதாக கோபமடைந்துள்ளனர். இங்குள்ள திருமணம் ஆகாத இளைஞர்கள் சிலர் ஆங்காங்கே சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதாவது, திருமணத்தை தடுத்து நிறுத்துபவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுப்பதாக அந்த போஸ்டரில் உள்ளது.

போஸ்ட்ர்

அதில், “பாலவிளையில் ஓர் சந்திப்பு.. குறிப்பாக 4, 5 நபர்களுக்கு மட்டும்.. ஊரில் வரும் திருமண வரன்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு.. தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும். குறிப்பு- சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாலவிளை பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதை ஒட்டியது யார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி

முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு கருங்கல் ஆயினிவிளை பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒருபடி மேலே போய் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து தெருவுக்கு தெரு ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web