ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு!! முதுகில் செம குத்து!!! சென்னையில் பரபரப்பு!!

 
இபிஎஸ் ஓபிஎஸ்

ஒற்றைத் தலைமை கோஷம் எதிரொலிக்கத் தொடங்கிய நிலையில் அதிமுக பொதுக்குழுவிலிருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலிருந்து வெளியேறினார்.
பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை மேலெழுந்தது. ஏற்கெனவே 23 தீர்மானங்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்திருந் நிலையில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதிமுக

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வந்து சேர்ந்தார். ஓபிஎஸ் வருகையின்போது “ஐயா எடப்பாடியார் வாழ்க, ஒற்றைத் தலைமை வேண்டும்” என எடப்பாடி ஆதரவாளர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பொதுக்குழுவில் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக உள்ள தமிழ்மண் உசேனை நிரந்தர அவைத்தலைவராக்குவது குறித்த தீர்மானம் நிவேற்றப்பட்ட நிலையில், இதை முன்மொழிய ஓபிஎஸ்-ம், வழிமொழிய இபிஎஸ்-ம் அழைக்கப்பட்டனர். இதனையேற்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். ஆனால் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இதனையடுத்து தீர்மானங்களை வைகைச்செல்வன் அறிவித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மைக்கை பிடித்து அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

 அதேபோல கே.பி.முனுசாமி, ஒற்றைத் தலைமை வேண்டும் என அனைவரும் வலியுறுத்துகின்றனர். அந்த தீர்மானம் இல்லாத மற்ற தீர்மானங்களை இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது என்றும், ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழு நடைபெறும் என்றும் கூறினார்.
தொடர்ந்து, அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய ஜெயக்குமார் வழிமொழிந்தார். தற்காலிக அவைத்தலைவராக உள்ள தமிழ்மகன் உசேனை கட்சியின் அவைத்தலைவராக பொதுக்குழு தேர்வு செய்தது. பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசைனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கடிதத்தை வாசித்த சண்முகம், ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுக

இதையடுத்து அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி காலை 9.15 மணிக்கு நடக்கும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.இதனையடுத்து அரங்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்தது. ஓபிஎஸ்-க்கு எதிரான கோஷங்களும் வலுபெறத் தொடங்கின. இந்த கோஷங்கள “ஓபிஎஸ்-ஏ வெளியேறு” என பரினாமமடையத் தொடங்கின தொடங்கின. சூழல் நெருக்கடியாக மாறியதை உணர்ந்த ஓபிஎஸ கூட்டம் நடந்துக் கொண்டிருக்கும்போதே வெளியேறினார். அவருடன் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோரும் வெளியேறினர். அப்போது பேசிய வைத்திலிங்கம் சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என்று குற்றம் சாட்டினார்.
வெளியேறிய பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுக்குழுவில் எடப்பாடிக்கு வெள்ளி கிரீடமும் வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டது. தொண்டர்களை நோக்கி இரட்டை இலை சின்னத்தை காட்டி பழனிசாமி கையை அசைத்தார். இறுதியாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் அதிமுக பொதுக்குழு நிறைவு பெற்றது அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

 

From around the web