ஓபிஎஸ்சின் பதவி காலாவதி?!! சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு!!

 
ஓபிஎஸ்


அதிமுகவில் ஓபிஎஸ்சின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று அதிமுக பொதுக்குழு கூடியது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.  

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், வைகைச் செல்வன், சிவி. சண்முகம், எஸ்.பி வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக அவைத்தலைவர் தேர்வு செல்லாது என்று வைத்திலிங்கம் கூறியது தவறு என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று விதியில்லை எனவும், கழக சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.

ஓபிஎஸ் கையெழுத்திட்டு கூட்டப்பட்ட பொதுக்குழுவை முறையற்றது என்கிறாரா வைத்திலிங்கம்?  என்றும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. பன்னீர் செல்வம் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர் என தெரிவித்தார். 
மேலும், அதிமுகவின் சட்டவிதி 19ன் படி முறையாக பொதுக்குழுவை கூட்டினோம். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும், அவைத்தலைவரை பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் அதுதான் அதிமுகவின் சட்ட விதி *அவைத்தலைவரை பொதுக்குழுவில் நேற்று அறிவித்தது தீர்மானம் கிடையாது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web