அட!! தமிழகத்தில் மது, கஞ்சா, குட்கா, சாராயம் எதுவுமே இல்லாத கிராமம் !!

 
சேலம்

தமிழகத்தில் அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது.இது  தவிர போதைப்பொருட்கள் விற்பனையும் ஆங்காங்கே கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகம் முழுவதும் போதைப் பொருள் பயன்பாடு குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் போதைப் பொருள் எதுவுமே  இல்லாத கிராமம் ஒன்று தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சர்ய உண்மை. அந்த வகையில் சேலம் மாவட்டம்  ஏற்காடு தலைச்சோலை கிராமம் பெற்றுள்ளதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சேலம்
தலைச்சோலை கிராமம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் போதைப்பொருள் புழக்கம், விற்பனை மற்றும் பயன்பாடு  என எதுவுமே இல்லை என  சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் சான்று வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனிப்பட்ட முறையில்  தலைச்சோலை கிராமத்தில் கஞ்சா உட்பட  எந்த விதமான போதைப்பொருட்களும் பயன்படுத்தப்படுவது இல்லை என்ற  அறிக்கையும் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் தலைச்சோலை கிராமமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டனர். இதற்கான அறிவிப்பு பலகை வைக்கும் பணி விரைவில் செய்து கிராம நுழைவாயிலில் வைக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.

போலீஸ்
இச்செய்தி குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விடுத்த செய்திக்குறிப்பில் ''தமிழகம் முழுவதிலும் போதைப் பொருள் நடமாட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்னும் தொடர்ந்து  பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே சேலம் மாவட்டம், ஏற்காடு தலைச்சோலை கிராமத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அதில் தலைசோலை கிராமத்தில் எந்தவொரு போதைப்பொருளும் பயன்படுத்தப்படாதது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.  இந்த கிராமங்களைச் சுற்றி எவரேனும் போதைப் பொருட்களை விற்க முயற்சித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web