அட!! 24லட்சம் சம்பளப் பணத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்!!!

 
லாலன் குமார்

தான் வாங்கிய லட்சக்கணக்கான சம்பளத்தை பல்கலைக்கழகத்திற்கே திருப்பி அளித்த பேராசிரியர் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளார்.பீகாரின் முசாபர்பூர் நகரில் நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி பி.ஆர்.அம்பேத்கர் பீகார் பல்கலைக் கழகத்தின் (பிராபு) கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு லாலன் குமார் (33) என்பவர் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்தி உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

லாலன் குமார்

இந்நிலையில் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரையில் தான் வாங்கிய சம்பளத்தை கணக்கெடுத்த பேராசிரியர் லாலன்குமார் அவற்றை திருப்பிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதன்படி கடந்த 2019ம் ஆண்டு முதல் சுமார் ரூ.24 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார். அதற்கான காசோலையை பல்கலைக்கழக பதிவாளரிடம் அவர் திருப்பி வழங்கினார். இவரின்  இந்த செயலால் பல்கலைக்கழகம் அதிர்ச்சியடைந்தது.

கல்லூரி

அதன் பின்னர் பேராசிரியர் லாலன் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மாணவர்களுக்கு பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்க எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. கொரோனா தொற்றின் போது  ஆன்லைன் வகுப்புகளின் போது கூட ஒரு சில மாணவர்கள் மட்டுமே இந்தி வகுப்புகளுக்காக வந்தனர். 5 வருடங்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்காமல் நான் சம்பளம் வாங்கினால் எனது கல்வி மரணமடைந்ததற்கு சமமாகும்’’ என்று கூறினார்.வேலைக்கு வரவில்லை என்றாலும் முழு சம்பளம் வாங்கிவிட வேண்டும் என்று பல ஊழியர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில்  பாடம் கற்பிக்காமல் தான் வாங்கிய சம்பளத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் அதை திருப்பிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web