அட கடவுளே! 8,000 லிட்டர் எரிபொருள்! 6 மில்லியன் மதிப்பு! சூப்பர் படகு எரிந்து நாசம்!

 
பிரிட்டன் கப்பல்

 6 மில்லியன் ரூபாய் மதிப்பு, 8,000 லிட்டர் எரிபொருளுடன் கூடிய சூப்பர் படகு திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இங்கிலாந்து நாட்டின் டெவோனில் உள்ள டோர்குவே மெரினாவில் 85 அடி நீளமுள்ள சூப்பர் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

பிரிட்டன் கப்பல்

நேற்று மதியம் 12.10 மணிக்கு டெவோனில் உள்ள டோர்குவே மெரினா கடற்கரை துறைமுகத்தில் சூப்பர் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் 6 மில்லியியன் என்று கூறப்படுகிறது. மேலும் இது 85 அடி  நீளம் கொண்ட இந்த படகு திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இந்த திடீர் தீ விபத்தை பற்றி நேரில் கண்டவர்கள் கூறும்போது, ‘‘திடீரென்று மிகப்பெரிய வெடி சத்தத்துடன் கரும்புகை கிளம்பியது. இதனால் கப்பலில் வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியது. இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்து பகுதியில் வசித்த வரும் மக்களை வேகமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயை விரைந்து அணைக்கும் பணியிலும் இறங்கினர்.

பிரிட்டன் கப்பல்

இந்த திடீர் தீவிபத்து குறித்து போலீசார் கூறும்போது, ‘‘தீ விபத்துக்குள்ளான சூப்பர் படகில் 8 ஆயிரம் லிட்டர் எரிப்பொருள் இருந்துள்ளது. அதனால் தீ விபத்து காரணமாக துறைமுகத்திற்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வீட்டின் கதவு, ஜன்னல்களை பூட்டிவைக்கும்படி கேட்டுக் கொண்டோம். கடும் முயற்சியைத் தொடர்ந்து தற்போது படகில் தீ சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் படகு துறைமுகத்தின் கயிறுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய காரணத்தால் தீயணைப்பு துறையினர் அதனை தீவிரமாக கண்காணித்து பாதுகாத்து வருகின்றனர் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், துறைமுகத்தின் நுழைவாயிலை அதிகாரிகள் தற்காலிகமாக மூடி வைத்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 ஆயிரம் லிட்டர் எரிபொருளுடன் சூப்பர் படகு இங்கிலாந்தில் எரிந்து நாசமான சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web