இன்று முதல் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் செயல்படத் தடை!

 
ஓலா ஊபர்

பெங்களூருவில் இன்று முதல் ஓலா, ஊபர் நிறுவன ஆட்டோக்கள் ஓட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் மொபைல் செயலிகள் மூலம் வாடகை கார்கள், ஆட்டோக்கள் , பைக்குகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூருவிலும்  ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்கள் வாடகை கார்கள் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளன.

ஓலா ஊபர்

புதிய இணைப்புக்கு பின் இந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் ,  வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து  கர்நாடக போக்குவரத்து ஆணையம் சார்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு ஓலா, ஊபர், ரேபிடோ மூலம்  வாடகை கார்களை மட்டுமே இயக்க வேண்டும் எனவும், ஆட்டோக்களை இந்த சேவையில் ஈடுபடுத்துவது சட்டப்படி தவறு எனவும்  கூறியுள்ளது. அத்துடன் அடுத்த  3 நாட்களுக்குள் வாடகை ஆட்டோ சேவையை இந்த நிறுவனங்கள் கைவிட வேண்டும் எனவும்  ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

ஓலா ஊபர்

 வாடகை ஆட்டோ சேவையை நிறுத்த அரசு நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது . இந்நிலையில் இன்று அக்டோபர் 10ம் தேதி திங்கட்கிழமை முதல் பெங்களூரு உட்பட கர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் வாடகை ஆட்டோக்கள் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசின் இந்த உத்தரவை மீறி ஆட்டோக்கள் இயக்கப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என  போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!