செமஸ்டர் தேர்வுகளுக்கு பழைய கட்டணங்களே வசூலிக்கப்படும்!! மாணவர்கள் உற்சாகம்!!

 
பொன்முடி

தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கான அட்டவனையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். மேலும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றார்.

செமஸ்டர்

தொடர்ந்து பேசிய அவர், பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நீட் தேர்வுக்கு பிறகே நடைபெறும் என்றும் அதற்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்றும் பழைய செமஸ்டர் கட்டணங்களே வசூலிக்கப்படும் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாது, அதற்கு மாறாக மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பொறியியல் படிப்புகள், தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்மூலம், பொறியியல் படிப்புகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு தயாராகும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!!நேரடி செமஸ்டர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!!

இந்தப் புதிய உத்தரவின்படி, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பி.இ, பி.டெக், பி.ஆர்க் போன்ற படிப்புகளில் சேருவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக 79,600 ரூபாயும் அதிகபட்சமாக 1 லட்சத்து 89 ஆயிரத்து 800 ரூபாயும் செலுத்த வேண்டும். இவை ஒரு செமஸ்டருக்கு செலுத்த வேண்டிய தொகைகள் ஆகும். பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரையில் தற்போது குறைந்தபட்சமாக 55 ஆயிரம் ரூபாயும் அதிகபட்சமாக 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும் உள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் பழைய செமஸ்டர் கட்டணங்களே வசூலிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web