ஒன்றரை லட்ச ரூபாய் மானியம்! எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தேவை?

 
கறவை மாடு

இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கோங்க. உங்களுக்கு பயன் தரலைன்னாலும் உங்களுக்குத் தெரிஞ்ச விவசாயிகளுக்கு இந்த செய்தியை எடுத்து சொல்லுங்க. கஷ்டப்படுகிற யாரோ ஒருவருக்கு இது பயன்பட்டு, அவர்களது குடும்ப பொருளாதாரம் இதன் மூலமா மேலே வரலாம். திருப்பூர் மாவட்டத்தில் கறவை வாங்க மானியம் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது கிராமத்து மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ மூலமாக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கறவை மாடு வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது. அதற்கு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1.50 (ஒன்றரை) லட்சம் மானியம் நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கறவை மாடு

இந்த தொகையில் 30 சதவீதத்தை மானியமாகவும், மீதமுள்ள தொகையை வங்கி கடனாகவும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள் http://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருந்தால் http://fast.tahdco.com   என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

கறவை மாடு
24 மணி நேரமும் பதிவு செய்யும் படி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவின் போது விண்ணப்பதாரர் தனது புகைப்படம், சாதிச்சான்று, வருமான சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடசான்று, ஆதார் அட்டை ஆகியவற்றை உடன் வைத்திருக்க வேண்டும். மேலும் மாடு உரிமையாளரிடம் இருந்து பச்சைத் தாளில் மாடு பெறுபவர் கண்டிப்பாக மாடுகளின் விலையை குறிப்பிட்டு எழுதி வாங்கி வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். ஒன்றரை லட்சம் அளவிற்கு கறவை மாடு வாங்க மானியம் வழங்கப்படுவதால் கிராமத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web