அச்சச்சோ!! இந்த வார்த்தைகள் பேச தடை!! அதிரடி உத்தரவு!!!

 
பாராளுமன்றம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் உறுப்பினர்கள் பேசக்கூடாத வார்த்தைகள் பற்றிய புத்தகத்தை மத்திய செயலகம் வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க் கட்சி உறுப்பினர்களும் ஒருவரையருவர் தகாத வார்த்தைகளால் வசைப்பாடிக் கொள்வது வழக்கம். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அவை தள்ளிவைக்கப்படும். கூட்டத்தொடரில் கண்டிக்கத்தக்க வார்த்தைகள் பேசப்பட்டால் அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும் சம்பவங்களும் நடந்தேருகின்றன. 

பாராளுமன்றம்

ஜூலை 18ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் குறிப்பிடப்பட்ட புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. மேலும் இதனை உறுப்பினர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக குறப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றம்
மேலும், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளுக்கும் இனிமேல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மக்களவை செயலகம் அறிவுறுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web