அச்சச்சோ!! மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம்!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் பங்குச்சந்தையும் வீழ்ச்சியடைந்து வருவதால்  முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில்  முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் பங்குச்சந்தைகள் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்ட முடியவில்லை என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.  இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. 

தங்கம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையானது.

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.  இந்நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் உயர்ந்து, ரூ.4,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.38,360-க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,928-க்கு விற்பனையாகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.68,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web