திடீரென பழுதான அரசு பேருந்து! 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! 35 பயணிகள் படுகாயம்!

 
பேருந்து

நாகர்கோவில் அருகே அரசு பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயமடைந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழாகுடியிலிருந்து இன்று மாலை அரசு பேருந்து ஒன்று நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

பேருந்து

இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் புத்தேரி மேம்பாலம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது வளைவில் ஓட்டுநர் ஸ்டியரிங்கை வளைக்க முயன்ற போது ஸ்டியரிங் வேலை செய்யாததால் திடீரென 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 

பேருந்து
இந்த விபத்தில் 20 பெண்கள் 5 குழந்தைகள் 10 ஆண்கள் என 35 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விபத்தில் சிக்கியவர்களை பேருந்து கண்ணாடியை உடைத்தும் ஜன்னல் வழியாகவும் வெளியே எடுத்து காப்பாற்றினார். படுகாயம் அடைந்த பயணிகள் அனைவரும் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பூதப்பாண்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web