ஜூலை 18 முதல் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு!! மாணவர்கள் உற்சாகம்!!!

 
யுபிஎஸ்சி தேர்வு விடுமுறை மாணவர்கள் கல்லூரி

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கலை , அறிவியல் மற்றும் பொறியியல்  கல்லூரிகளில் 2022-2023ம் கல்வியாண்டுக்கான  மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டுக்கான கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை நடைபெற்று முடிந்துள்ளது.

கல்லூரி மாணவிகள்

செமஸ்டர் தேர்வுக்கு பிறகு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்  ஜூலை 18ம் தேதி திங்கட் கிழமை  திறக்கப்பட உள்ளதாக  கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து  கல்லூரிக் கல்வி இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் சென்ற  கல்வியாண்டின் கோடை விடுமுறைக்கு பின்,  ஜூலை 18ம் தேதி திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

கல்லூரி பெண்கள் யுஜிசி

 2022-23ம் கல்வியாண்டுக்கான நேரடி  வகுப்புகள் தொடங்கப்படும்.  இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்துவித கல்லூரிகளின் முதல்வா்களும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்லூரிகளில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web