காலை மாலை இரு ஷிப்டுகளில் பள்ளிகள் திறப்பு!? பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு!

 
விடுமுறை

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தினசரி தொற்று உயர்ந்து வருகிறது. அதிலும் சென்னையில் அதிகபட்ச கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவதால் மிகுந்த அச்சம் நிலவுகிறது. சென்னையில் நேற்று 1,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 13ம் தேதி கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதன்படி நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே மாணவர்களுக்கு தொற்று பரவலாமல் தடுக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றால் சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். 

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

முழு அளவில் வகுப்புகள் நடந்து வருவதால் மாணவர்கள் அனைவரும் அருகருகில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு ஒரு நாள் விட்டு பள்ளிகளைத் திறக்கலாமா? அல்லது காலை, மாலை என இரு ஷிப்டுகளாக சுழற்றி முறையில் மாணவர்களை வர வைத்து வகுப்புகளை நடத்தலாமா என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பள்ளிகளை ஷிப்டு முறையில் அதாவது, காலை மாலை என 2 வேளைகளாக பிரித்து நடத்தலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  உத்தரவு!! தமிழக அரசு அதிரடி!!

மற்றொரு வழிமுறையாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்களை அட்டவணைப்படுத்தப்பட்டு பள்ளிக்கு வரவழைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசின் உத்தரவை பின்பற்றி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்’’ என்று கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைனில் நடத்தப்பட்டன. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளதாக எழுந்த பிரச்சினை தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பால் பள்ளிகள் முடங்கும் சூழ்நிலை உருவாகிவிடுமோ என்று பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web