280 பெண்கள் பள்ளிகள், 164 ஆண்கள் பள்ளிகளை மூட உத்தரவு!! கல்வித்துறை அதிரடி!!

 
மாணவர்கள்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவிகள், மாணவர்கள் என தனித்தனியாக பள்ளிகளும், இருபாலரும் பயிலும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆண்கள், மகளிர் பள்ளிகள் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆண்கள், மகளிர் பள்ளிகள் குறித்து கேரள அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

மாணவிகள்

கேரளாவில் மகளிர் பள்ளிகள் 280, ஆண்கள் பள்ளிகள் 164 என்ற அளவில் செயல்பட்டு வருகிறது. வருகிற கல்வியாண்டு முதல் (2023-2024) கேரளாவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு அவற்றை இருபாலர் படிக்கும் பள்ளிகளாக மாற்றி இணைக்கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டும் குழந்தை உரிமைகள் ஆணையம் கேரள கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்
இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக பள்ளிகளில் உள்ள கழிவறை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மாணவர்கள், மாணவிகள் இணைந்து படிக்கும் இணைக்கல்வியின் அவசியம் குறித்தும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய செயல் திட்டம் அடுத்த ஆண்டு கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து 90நாட்களுக்குள் செய்து முடித்துவிட வேண்டும் என்று கல்வித்துறையின் முதன்மை செயலாளர், பொதுக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web